அதிகரிப்பு! மருத்துவமனைகளில் புறநோயாளிகள் எண்ணிக்கை...தட்பவெப்ப நிலை மாறுவதால் பலருக்கும் காய்ச்சல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
06:38

காஞ்சிபுரம்--சீதோஷ்ண நிலை மாறுவதால், பலருக்கும் காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகளாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் சூழலில், பனி, மழை என சீதோஷ்ண நிலை மாறுவதால், பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று காலை திடீரென லேசான மழை பெய்ததால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து குளிராகவே இருந்தது. பகல் முழுதும் குளிராகவும், வானம் மேக மூட்டமாகவும் இருந்ததால், பலர் வீடுகளிலேயே முடங்கினர்.மார்கழி மாதம் முடிந்துள்ள நிலையில், தை மாதமும் குளிராக உள்ளதால், பலருக்கும் காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.இதனால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.காஞ்சிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி கூறியதாவது:முன்பைவிட இப்போது புறநோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில், ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 23 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றுக்கு, தலா 50 புறநோயாளிகள் வழக்கத்தைவிட அதிகமாகவே வருகின்றனர்.புறநோயாளிகள் பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற காரணங்களே அதிகளவில் காணப்படுகிறது. மேலும், மருத்துவர் பரிந்துரையின்றி 'ஆன்டிபயாட்டிக்' மருந்துகளை எடுக்க கூடாது. மருந்துக் கடைகளில் நேரடியாக சென்று காய்ச்சல், ஜலதோஷம் போன்றவைக்கு மருந்துகளை பெற கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.பெயர் குறிப்பிடாத செவிலியர் ஒருவர் கூறியதாவது:வழக்கமாக 50 முதல் 80 பேர் புறநோயாளிகள் வருவர். ஆனால், குளிர்காலம் துவங்கியது முதலே புறநோயாளிகள் அதிகம் வருகின்றனர்.சில நாட்களாக பஞ்சுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், 14ல் 121 பேர், 15ல் 143 பேர், 16ல் 163 பேர், நேற்று 202 பேர், சளி, காய்ச்சல், தலை வலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் அதிகம். குளிர்காலத்தில் சீதோஷ்ண நிலை மாறுவதால், அதிகமானோருக்கு இந்த பிரச்னைகள் வருவதால், எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.500 பேர் அதிகம்காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் வசிப்போர் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வழக்கமாக, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் எண்ணிக்கையைவிட, தினம் 500 பேர் அதிகமாக வருகின்றனர். நேற்று 1,700 பேர் காய்ச்சல் காரணமாக புற நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சென்றனர். மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை என்பதால், பலரும் இங்கு வரவே விரும்புகின்றனர். கொரோனா சிகிச்சைக்கும், அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிகள்காஞ்சிபுரம்மருத்துவமனை செல்ல தயக்கம்!கொரோனா வைரஸ் பரவல் மிக வேகமாக பரவி வருகிறது.

சீதோஷ்ன நிலை மாறுபாடு காரணமாக, சாதாரண காய்ச்சல், சளி, இருமல் போன்ற சாதாரண பிரச்னை ஏற்படுகிறது. காய்ச்சல் என அரசு மருத்துவமனை சென்றால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சொல்கிறார்கள் என சிலர் மருத்துவமனைக்கு செல்வதில்லை. மாறாக, மருந்துகடையில் பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு, வீட்டிலேயே இருக்கின்றனர். உபாதைகள் அதிகமான நிலையில்தான், மருத்துவமனைக்கே வருகின்றனர். அதுபோன்று அலட்சியத்துடன் இருக்க கூடாது என, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X