அம்பிளிக்கை : கர்நாடகா மாரடிகள்ளியைச் சேர்ந்த ஜெகதீஷா 42. இவர் தனது லாரியில்தின்பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றார். கொசவபட்டி அருகே சென்றபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். லாரியில் இருந்த ரூ.2.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.