பெரியகுளம், : ஈரோட்டைச் சேர்ந்தவர் லோகநாதன் 25. அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் மாதேஸ்வரன் 38,மோகன் 23,கதிரவன் 38, வடிவேல் 45, முருகன் 35, ரகு 30 உட்பட 9 பேர் சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஈரோட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் 25 வேன் ஓட்டினார். வடுகபட்டி பைபாஸ் ரோடு கடந்து செல்லும்போது, வேகமாக சென்ற வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தேனி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.