பெரியகுளம் : பெரியகுளம் அருகே முருகமலையை சேர்ந்தவர் முத்துபாண்டி மனைவி கலைச்செல்வி 33. பாரதி நகரில் துணி தேய்ப்பு கடை வைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் குப்பையில் கிடந்த மண்ணெண்ணெய் கேனை, கலைச்செல்வி எடுத்துள்ளார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,'எங்கள் வீட்டில் இருந்து திருடி வந்துவிட்டாய்',என கலைச்செல்வியிடம் கூறினார். தொடர்ந்து அந்தப் பெண் சண்டையிட்டுள்ளார். மனவேதனையில் கலைச்செல்வி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.