தேனி : தேனி பெரியகுளம் ரோடு ரத்தினம் நகரில் புதிதாக ராயல் புட்கோட் சைவ, அசைவ உணவகம் திறக்கப்பட்டது.கவுமாரியம்மன் புட் நிறுவனத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் தேனி நடார்கள் உறவின் முறை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் உணவகத்தை திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் சந்திரக்குமார், அருஞ்சுனை ராஜவேல், கமலக்கண்ணன், காளிமுத்து, சுதாகர், மனோகரன், முத்துராஜா, தேனி நகர ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் கண்ணதாசன், பொன்முருகன், முருகேசன், அருண்பிரசாத் டிரேடர்ஸ் பிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஜி.எச்.,ரோடு நாடார்கள் முன்னேற்ற சங்க தலைவர் ஜோசப் தலைமையில் தினேஷ் குமார், சரண்யா செய்திருந்தனர்.