தேனி : சமூக நலத்துறை சார்பில் தேனியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இங்கு தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 விசாரணை பணியாளர், ஒரு பல்நோக்கு உதவியாளர், ஒரு பாதுகாவலர் பணியிடங்கள் உள்ளன. விரும்புவோர் www.theni.nic.in இணையதளத்தில் விபரங்கள் அறிந்து சுயவிவர குறிப்பு, சான்று நகல்களுடன் ஜன.,28 க்குள் மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.