தேனி : மாவட்டத்தில் துாய்மை பாரத இயக்கம்(ஊரகம்) 2021-2022ல், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை ஊக்குவிக்க 'முன்மாதிரி கிராம விருது' வழங்கப்பட உள்ளது. ஒன்றியத்துக்கு ஒரு ஊராட்சி என முன்மாதிரி விருது ரூ.7.50 லட்சம் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வாகும் 3 ஊராட்சிகளை தேர்வு செய்து மாநில போடிக்கு பரிந்துரைக்கப்படும். இதற்கு விருது ரூ.15 லட்சம் வழங்கப்படும். ஊராட்சிகளை துாய்மையாக வைக்க கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.