மானாமதுரை, இளையான்குடியில் கிராவல் மண் தட்டுப்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
07:09

மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி பகுதியில் கிராவல் மண் கிடைக்காமல் கட்டடம் கட்டுபவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கிராவல் மண் குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுக்காததால் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் புதிதாக வீடுகள்,வணிக நிறுவனங்கள், கட்டடங்கள் கட்டுபவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கட்டடங்கள் கட்டுபவர்கள் கூறுகையில்,புதிதாக கட்டடங்கள்கட்டுபவர்கள் பேஸ்மட்டத்திற்கு கிராவல் மண் கொண்டு நிரப்பினர்.அதற்கும் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வீடுகள் கட்டுபவர்கள் மிகுந்தசிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் கிராவல் குவாரி செயல்பட்டு வந்த போது 3யூனிட் கிராவல் மண் ரூ.3ஆயிரத்திற்கு விற்பனையானது.

தற்போது சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக குவாரிகள் செயல்படாததால் மற்ற மாவட்டங்களிலிருந்து கிராவல் மண் கொண்டு வரப்படும்போது 3 யூனிட் ரூபாய் 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலையேற்றத்தின் காரணமாக வீடுகள் கட்டுபவர்கள் கூடுதலாக பணம் செலவழிக்கவேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சிவகங்கை மாவட்டத்தில் குவாரிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X