பொங்கலுார்:நெகமம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் மருதாசலம், 80. இவருக்கு வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி இருந்துள்ளது.வதம்பச்சேரி பி.ஏ.பி., பெரிய பாலத்திற்கு சென்றுள்ளார். பின், தான் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று பேத்திக்கு போனில் தகவல் சொல்லி உள்ளார். பின், வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.பெண் தற்கொலைபல்லடம் வடுகபாளையம் புதுாரை சேர்ந்தவர் வசந்தாமணி, 60; சர்க்கரை நோய், கிட்னி பாதிப்பு இருந்தது. விரக்தி அடைந்த அவர் பி.ஏ.பி., வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.மருதாசலம், வசந்தாமணி ஆகியோரின் உடல்கள் அலகுமலை பி.ஏ.பி., அமுக்கு பாலத்திலிருந்து மீட்கப்பட்டன.தொழிலாளி பலிபெருந்தொழுவு கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் ராசு, 55; கூலித்தொழிலாளி. மனைவி பிரிந்து சென்று விட்டார்.விரக்தியில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவினாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.