திருப்பூர்:ஊத்துக்குளி, பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 64. மனைவி, பார்வதி, 57. கோபிநாத், 31 என்ற மகன் உள்ளார்; திருமணமாகவில்லை. சமீபத்தில் விபத்து ஏற்பட்டு, காலில் பலத்த காயமடைந்து, வீட்டில் உள்ளார்.கூலி தொழிலாளியான கருப்பசாமியும், பார்வதியும் வேலை இல்லாமல், போதிய வருமானமில்லாமல் இருந்துள்ளனர்.நேற்று மகன் கோபிநாத் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் தம்பதிகள் இருவரும் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.