ஊட்டி:நீலகிரி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஜெயராமன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:நீலகிரி அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியரான நான், கோத்தகிரி, குன்னுார் உள்ளிட்ட கிளை அலுவலகத்தில் கடந்த, 37 ஆண்டுகளாக பணிபுரிந்து கடந்த, 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எனக்கு சேரவேண்டிய பண பலன்கள், 21 லட்சம் ரூபாய் இதுவரை எனக்கு போக்குவரத்து துறையால் வழங்கப்படவில்லை.கோவை போக்குவரத்து தலைமை அலுவலகத்தை பலமுறை அணுகியும், எனக்கு வரவேண்டிய பண பலன்கள் வரவில்லை. எனக்கு சேரவேண்டிய பண பலன் தொகையை வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.