பந்தலுார்:பந்தலுார் அருகே, பொன்னானியில் நேரு யுவகேந்திராவின் கீழ் செயல்படும் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிளப் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். அதில்,'கொரோனா பரவல் மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழி முறைகள், முகக் கவசம் அணிவதன் அவசியம், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியம்,' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், திலகர், சேகர் மற்றும் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.