வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத்தில் விறகு சேகரிக்க தடை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
08:34

வால்பாறை:வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், வனத்திற்குள் தொழிலாளர்கள் விறகு தேட செல்வதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்கள் உள்ளன. இரு வனச்சரகங்களிலும், யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமுள்ளன.வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்கு -- மனித மோதல் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் தாக்கி, 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், வால்பாறையில் பருவமழைக்கு பின் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பகல் நேரத்திலேயே குடிநீரை தேடி செல்கின்றன. இதனால், வனப்பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழைய வேண்டாம் என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க அனுமதிக்க கூடாது. வனவிலங்கு - மனித மோதலால் உயிரிழப்பை தவிர்க்க, அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தொழிலாளர்கள் விறகு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும்.இரவு நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாட்டத்தை குறைக்க எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் வாழை, பலா, கொய்யா போன்ற பயிர்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சிறுத்தை நடமாட்டத்தை தவிர்க்க வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் இறைச்சிக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X