சென்னை : கொளத்துாரில் வீடு புகுந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கொளத்துார், பெரியார் நகரைச் சேர்ந்தவர் மேரி, 55; தனியார் நிறுவன ஊழியர். இவரும், அவரது மகளும் அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இவர்களது வீட்டில், முகவரி கேட்பதுபோல் சென்ற வாலிபர் ஒருவர், அவரை தள்ளி விட்டு, வீட்டிற்குள் புகுந்து தாழ்பாள் போட்டுக்கொண்டார்.தகவலறிந்து சென்ற பெரவள்ளூர் போலீசார், கதவை திறந்து உள்ளே சென்ற போது, அந்த நபர் கழுத்திலும், கையிலும் பிளேடால் அறுத்து உயிருக்கு போராடினார். அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன், 27, என்பது தெரிய வந்தது.அந்த வாலிபர் ஏன் தற்கொலைக்கு முயன்றார்; எதற்காக கொளத்துாரில் அறிமுகமில்லாதவர் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்? என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.