கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது.
பொங்கல் பண்டிகையை யொட்டி ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கலான நேற்று முன்தினம் முழு ஊரடங்கு என்பதால், நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.இதனைத் தொடர்ந்து நேற்று கச்சிராயபாளையம் பகுதியில் மாத்துார், மண்மலை, குதிரைச்சந்தல், எடுத்த வாய்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் தலா 30க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கிராம இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று காளைகளை அடக்கினர். வெற்றி பெற்ற இளைஞர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
ஏமப்பேரில் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில், 27 காளைகள் பங்கேற்றன. இளைஞர்கள் காளைகளை அடக்கினர். அத்துடன் கிரிக்கெட், கோலப்போட்டி, பூப்பந்தாட்டம், சிறுவர் கபடி, மாறுவேடப் போட்டி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், குண்டு எறிதல், ஸ்பூனில் எலுமிச்சம் பழம் எடுத்து ஓடுதல், கயிறு தாண்டுதல், இசை நாற்காலி, மாணவ, மாணவியர் அறிவுத்திறன் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.