பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக, 'பார்வேர்ட் டிரஸ்ட்' சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியைச்சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பண உதவி தேவைப்பட்டது.தகவல் அறிந்த பொள்ளாச்சி பார்வேர்ட் டிரஸ்ட் சார்பில், சம்பந்தப்பட்ட சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. டிரஸ்ட் நிறுவனர் சபரீஸ்வரன், அறங்காவலர்கள் மோகன்ராஜ்குமார், ஜெயக்குமார் முன்னிலையில் நிதி வழங்கப்பட்டது.அமைப்பினர் கூறுகையில், 'சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக, 1 லட்சத்து, 40 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் இந்த பணம் செலுத்தப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.