அரசு மானிய திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இழுபறி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
09:37

உடுமலை:உடுமலையில், 'டாப்செட்கோ' திட்டத்தில், மானியத்தொகை விடுவிக்காததால், விவசாய மின் இணைப்பு கிடைக்காமல் விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகளுக்கு, போர்வெல் அமைத்து, இலவச விவசாய மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அலுவலர்களாக ஆய்வு செய்யப்படுகிறது.தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு, கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.நிலம் அடமானம் அடிப்படையில், கடன் பெற்று போர்வெல் அமைக்கும் விவசாயிகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், இலவச மின்சாரம் வழங்கும் வகையில், 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, போர்வெல் அமைத்த விவசாயிகளுக்குரிய மானியத்தொகை விடுவிக்காததால், பல ஆண்டுகளாகியும் மின் இணைப்பு கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது :பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறு, குறு விவசாயிகள் பாசனத்திட்டம் அமைக்க 'டாப்செட்கோ' திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுக்கு முன் தேர்வு செய்து, கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, போர்வெல் அமைக்க கடன் பெற்றோம்.அதற்கு பின், மின் இணைப்பு வழங்க, மானியத்தொகையை அத்துறை மின் வாரியத்திற்கு வழங்காததால், மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்படுகிறோம்.தற்போது, இலவசம் மற்றும் தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ், மின் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு மானியத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதால், மின் இணைப்பு பெற முடியாத சிக்கல் ஏற்படுகிறது.மின் வாரிய அதிகாரிகள் தரப்பில், ''டாப்செட்கோ திட்டத்தின் கீழ், கடன் மற்றும் விவசாய மின் இணைப்பு வழங்க, திருப்பூர் மாவட்டத்திற்கு மறு மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, மின் இணைப்பு வழங்க முடியாது,'' என தெரிவிக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், 'டாப்செட்கோ' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X