பொள்ளாச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., 105வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, புது பஸ்ஸ்டாண்ட் முன் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ., பேசுகையில், '' அ.தி.மு.க., ஆட்சியில் பொதுமக்களுக்கு, பொங்கல் பொருட்களுடன், 2,500 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில், வெறும் பொருட்களை மட்டும் கொடுத்துள்ளனர். இந்த ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வர பாடுபடுவோம்,'' என, பேசினார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு நகர அ.தி.மு.க., சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., தாமோதரன் எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மலர் துாவி வணங்கினார். தொடர்ந்து, நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மா மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உருவப்படத்துக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நெகமம்நெகமத்தில், நாகர் மைதானம், திருவள்ளுவர் திடல், எம்.ஜி.ஆர்.,நகர், சின்னேரிபாளையம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு பொள்ளாச்சி வடக்கு - கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சோமசுந்தரம், நகரச்செயலாளர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் ஆகியோர் எம்.ஜி.ஆர்.,படத்துக்கு மரியாதை செய்து, கட்சினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர்.
உடுமலை
உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க., வினர் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். குடிமங்கலம் ஒன்றியம் அனிக்கடவு கிராமத்தில், பெண்கள் உட்பட ஏராளமானோர் எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் ஈஸ்வரன், ஹரிதாஸ், தண்டபாணி, பா.ஜ., சார்பில், மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உடுமலை ஒன்றியம், சந்தனகருப்பனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.வால்பாறைவால்பாறை நகர அ.தி.மு.க., சார்பில் நடைபெற்ற விழாவில், ரொட்டிக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, நகர துணைச்செயலாளர் பொன்கணேஷ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர்.விழாவில் வக்கீல் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் பெருமாள், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுடர்பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்கெட் ஏ.டி.பி., தொழிற்சங்க அலுவலகத்தில், மாவட்ட பாசறை இணைசெயலாளர் சலாவுதீன் தலைமையில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.தென்மாநில அண்ணா தோட்ட தொழிலாளர் சங்கத்தலைவர் ஷாஜூ தலைமையில், எம்.ஜி.ஆர்.,சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.வால்பாறை அம்மா மக்கள் முன்னேற்ற கழகக்தின் சார்பில், நகரச்செயலாளர் நெல்லைசெல்வன் தலைமையில், ரொட்டிக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நமது நிருபர் குழு