பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட சவுண்டம்மன் கோவில் வீதி, ஸ்ரீமன்னராஜன் நகர், மரப்பேட்டை வீதி, வெங்கட்ரமணன் ரோடு, அண்ணா அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம், சமத்துார், கோலார்பட்டி, நாட்டுக்கல்பாளையம், தென்குமார பாளையம், மாமரத்துப்பட்டியில் தலா, ஒருவருக்கும், வஞ்சியாபுரம்,சின்னாம்பாளையம், மோதிராபுரம், கஞ்சம்பட்டி, எஸ்.சந்திராபுரத்தில் தலா, இரண்டு பேருக்கும்;மாக்கினாம்பட்டியில், மூன்று பேர், சூளேஸ்வரன் பட்டியில்,ஏழு பேர் என மொத்தம், 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆ.சங்கம்பாளையம், பொன்னாயூர், ஆர்.பொன்னாபுரம், கொள்ளுப்பாளையம், அனுப்பர்பாளையத்தில் தலா, ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.ஆனைமலைஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட, ஆனைமலை, கோட்டூர், சோமநாதபுரம், செம்மேடு, ஆத்துப்பொள்ளாச்சி, தென்சித்துார் மற்றும் வேட்டைக்காரன்புதுார் ஆகிய பகுதிகளில், ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட, நல்லட்டிபாளையம், வடசித்துார், சொக்கனுார் ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கிராமங்களில் நேற்று, 15 பேருக்கு தொற்றுப்பரவல் உறுதியானது.