பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மாப்பிள்ளைகவுண்டன்புதுாரை சேர்ந்த விவசாயி கணேசன், 72, நேற்றுமுன்தினம் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது, எதிரே மாட்டு வண்டியில் வந்த கோவிந்தனுாரைச்சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணனுக்கும், 46, கணேசனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கு வந்த மாப்பிள்ளை கவுண்டன்புதுாரைச்சேர்ந்த மகாலிங்கம், 62 உடன் சேர்ந்து, கோபாலகிருஷ்ணன், கணேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிய வருகிறது.காயமடைந்த கணேசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கொடுத்த புகாரின் பேரில், வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.