திருப்பூர்:நுால் மற்றும் பஞ்சு விலை உயர்வு கட்டுப்படுத்த கோரி, திருப்பூரில் இன்று ரயில் மறியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) தலைவர் அகில் ரத்தினசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நுால் விலை உயர்வு, நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர துணி உற்பத்தி ஆலைகளை பெரும் பாதிப்படையச் செய்துள்ளது. துணி உற்பத்திக்கான மூலப் பொருளான நுால் மற்றும் பஞ்சு ஏற்றுமதி தடை செய்ய வேண்டும்.இந்திய பருத்தி கழகம் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து, அதை முறையாக மில் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். இடைத் தரகர், வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதால், செயற்கையான விலை ஏற்றம், பதுக்கலால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாளை (இன்று) திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.