ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 92 பேர் நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 36 ஆயிரத்து 262 ஆனது. 92 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 34 ஆயிரத்து 573 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் இறந்தார். பலி எண்ணிக்கை, 221 ஆக உயர்ந்தது.