பல்லடம் : உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், 'தென்னீரா' சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி, பல்லடத்தில் இன்று நடக்கிறது.
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தும் வகையில், 'நீரா' பானம் மற்றும் வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கடந்த ஆண்டு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் துவங்கப்பட்டது. விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல், இடைத்தரகர்களை தவிர்த்து, பேக்கிங், சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப உதவிகள் வழங்குதல், உற்பத்தியில் துவங்கி விற்பனை வரை பயிற்சி அளித்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு, இந்நிறுவனம் துவங்கப்பட்டது.
கடந்தாண்டு அக்., மாதம் 'நீரா' பானம் அறிமுக விழா நடந்தது. இன்று அதை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பல்லடம் வனாலயம் வளாகத்தில் நடக்கும் விழாவுக்கு, அமைச்சர் சாமிநாதன் தலைமை வகிக்க உள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் 'தென்னீரா' பானத்தை அறிமுகம் செய்ய, அமைச்சர் கயல்விழி பெற்றுக்கொண்டு, விற்பனையை துவக்கி வைக்க உள்ளார்.