வேகமெடுக்கும் 3வது அலை; உச்சமடையும் 'டோலோ' மாத்திரை விற்பனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜன
2022
12:43
பதிவு செய்த நாள்
ஜன 18,2022 11:23

கோவை: கோவையில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 'டோலோ' மாத்திரை விற்பனை எக்குத்தப்பாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பரவி வருகிறது.
அதேபோல், உருமாறிய கொரோனா வைரஸான 'ஓமைக்ரான்' தொற்றும் அதிகரித்து வருகிறது. ஓமைக்ரான தொற்று அதிகரித்து வந்தாலும், அதன் பாதிப்பு 'டெல்டா' போன்று பெரியளவில் இருக்காது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால், 'டோலோ 650' மாத்திரை அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. அதிகம் விற்பனையாகும் மாத்திரையில் முதல் இடத்தில் 'டோலோ' உள்ளது.


கொரோனா முதல் அலையின்போது, 'பாராசிட்டமால்' மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மருந்து கடைகளில் டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. அதேசமயம் பாராசிட்டமால் மாத்திரையும் விற்றுத்தீர்ந்தது.

தட்டுப்பாடு ஏற்பட்டதும், பாராசிட்டமால் வாங்கினால், வாங்குபவரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கொரோனா 'டெஸ்ட்' எடுக்க அறிவுறுத்தப்பட்டது.தற்போது கொரோனா மூன்றாவது அலையில், 'டோலோ' மாத்திரை அதிகமாக விற்கிறது. சாதாரண காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்டவற்றுக்கு 'டோலோ' தீர்வாக இருப்பதாக, டாக்டர்கள் பரிந்துரைக்க, கோவையிலுள்ள மருந்து கடைகளில் இம்மாத்திரை அதிகம் விற்பனையாகி வருகிறது.


சுகாதார ஆய்வு நிறுவன தரவுகளின்படி, 'டோலோ' மற்றும் 'கால்பால்' ஆகியவை காய்ச்சலுக்காக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளாகும். டாக்டர்களால் பரவலாக பரிந்துரைக்கப்படுகின்றன. சாதாரண காய்ச்சல் மற்றும் அதுதொடர்பான பாதிப்புகளுக்கான மருந்தாகி விட்டதே 'டோலோ' விற்பனைக்கு அதிக காரணம்.

மருந்து கட்டுப்பாட்டு துறை கோவை மண்டல உதவி இயக்குனர் குருபாரதி கூறுகையில், ''மருந்துச்சீட்டு இல்லாமல் காய்ச்சலுக்கான பாராசிட்டமால், டோலோ போன்ற மாத்திரைகளை விற்கக்கூடாது என, மருந்து விற்பனையகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி மருந்துச்சீட்டு இன்றி மாத்திரை வழங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
18-ஜன-202216:22:04 IST Report Abuse
Kumar வீட்டில நான்கு பெயர் இருந்தால் 40 மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள் வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
18-ஜன-202213:34:11 IST Report Abuse
Neutral Umpire அமெரிக்காவில் மருந்து சீட்டை கடையில் கொடுத்தால் மருத்துவருக்கு மெயில் அனுப்பி அவர் உறுதி செய்தால் மருந்து மாத்திரை கொடுப்பார்கள் ..அந்த மருந்து டப்பாவை குழைந்தைகள் திறக்கமுடியாவண்ணம் வடிவமைத்திருப்பார்கள்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஜன-202212:50:12 IST Report Abuse
A.George Alphonse கொரோனவும்,ஓமக்ரேனும் வேகமாக பரவும் இந்த நேரத்தில் இந்த மாத்திரைகளுக்கு doctor's preion அவசியம் என்று கூறுவது தேவையற்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X