கொரோனா அதிகரிப்புக்கு கவர்னர், முதல்வரே பொறுப்பு: நாராயணசாமி பாய்ச்சல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜன
2022
12:26
பதிவு செய்த நாள்
ஜன 18,2022 12:07



புதுச்சேரி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கு கவர்னரும், முதல்வரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பங்கேற்றனர். ஐகோர்ட் தீர்ப்பினை மதிக்காமல் இருந்ததன் விளைவு, தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டிருந்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கேளிக்கை, விளையாட்டுகள் என்று அனைத்து இடங்களையும் திறந்து விட்டதால், கொரோனா பரவலில் புதுச்சேரி முதல் இடத்தில் உள்ளது. இது, வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம்.

பெரிய மாநிலமான மகாராஷ்டிராவில் தொற்று பரவல் 40 சதவீதத்தை தாண்டவில்லை. டில்லி-26; தமிழகம்-24; கர்நாடகம்-32 சதவீதம் தொற்று பரவல் உள்ளது.சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொற்று பரவல் 57.44 சதவீதமாக உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு கவர்னர், முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்.சிறந்த மருத்துவ கட்டமைப்பு இருந்தும் புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வருகிறது. தலைமை செயலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எதில் முதலிடத்தில் இருக்க கூடாதோ,அதில் எல்லாம் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. நிர்வாகம் சீர்கேட்டுள்ளதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.அண்டை மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் இங்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தடுப்பூசி போட பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்கின்றனர். வீட்டிற்கு சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் என்ன பிரச்னை.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19-ஜன-202207:13:23 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இவர் உடம்பிலிருக்கும் தோற்றுக்கு தடுப்பூசி கூட வேல செய்யலா. அவ்வளவு விஷம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஜன-202204:22:33 IST Report Abuse
J.V. Iyer இவரை வீட்டிற்கு அனுப்பி வெகுநாட்களாகி விட்டதே மழை விட்டாலும் தூவானம் விடவில்லயே கருமந்திரம் நாராயணசாமி.
Rate this:
Cancel
18-ஜன-202219:01:40 IST Report Abuse
பேசும் தமிழன் சிலரது முகத்தை பார்த்தாலே கழுவி கழுவி ஊத்த தோன்றும்....பப்பு மற்றும் இவர் அந்த ரகம் தான்.... இவர்களது செய்தி வந்தாலே... கருத்துக்கள் பகுதியில் ஒரே கழுவி ஊற்றும் வேலை தான் நடக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X