பெருந்துறை: பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., 105வது பிறந்த நாளையொட்டி, குன்னத்தூர் நால்ரோடு பிரிவில், அவரது போட்டோவுக்கு, எம்.எல்.ஏ. ஜெயகுமார் தலைமையில், கட்சியினர் மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர். புது பஸ் ஸ்டாண்ட், குன்னத்தூர் ரோடு வாட்டர் டேங்க், பெத்தாம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில், கட்சிக்கொடியை எம்.எல்.ஏ., ஏற்றினார். இதில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாச்சலம், நகர செயலாளர் கல்யாணசுந்தரம், துணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.