கொப்புளித்து 'துப்பும்' பாதாள சாக்கடை; மாநகரில் நடுசாலையில் பாயும் கழிவுநீர் | ஈரோடு செய்திகள் | Dinamalar
கொப்புளித்து 'துப்பும்' பாதாள சாக்கடை; மாநகரில் நடுசாலையில் பாயும் கழிவுநீர்
Added : ஜன 18, 2022 | |
Advertisement
 

ஈரோடு: ஈரோட்டில், 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. பணி முடிந்த பகுதிகளில், கழிவு நீர் குழாய்கள் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் முறையாக கழிவு நீர் செல்லாமல் அடைப்பு ஏற்படுவதுடன், இது போன்ற இடங்களை உடனுக்குடன் சரி செய்யாத காரணத்தாலும், பாதாள சாக்கடை ஜங்ஷன் பாய்ன்ட் மூடியை தூக்கிக்கொண்டு கழிவு நீர் வெளியேறுவது வாடிக்கையாகி விட்டது. ஈரோடு-பெருந்துறை சாலையில், குமலன்குட்டை பகுதி யில் நடு சாலையில் பல நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் கொப்புளித்து வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோர், பாதசாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கனரக வாகனங்கள் வாரி இறைத்தபடி செல்கிறது. அப்போது சாலையில் செல்வோர் கழிவுநீர் அபிஷேகத்துக்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தீர்வு காண மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X