தாரமங்கலம்: தொளசம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் ஜோதிப்ரியா, 24. இவர் காதலித்து வந்த சேகர், 26, என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி, 2021 டிச.,27ல், திருமணம் செய்து கொண்டார். கடந்த, 2ல், தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என, ஜோதிப்ரியாவை அவரது தாய் தேன்மோழி, 55, அழைத்து கொண்டு, கே.ஆர்.தோப்பூரில் உள்ள அவரது தம்பியான மகாலிங்கம், 40, வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, நீ திருமணம் செய்தவரை விட்டு விட்டு வந்துவிடு, வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என, இருவரும் கூறியதாக தெரிகிறது. அதற்கு சம்மதிக்காத ஜோதிப்ரியாவை, இருவரும் தாக்கி உள்ளனர். காயமடைந்த ஜோதிப்ரியா சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் தாரமங்கலம் போலீசில் அவர் அளித்த புகார்படி, தேன்மொழி, மகாலிங்கம் ஆகியோர் மீது பெண் கொடுமை சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.