வனத்துறை அபராதம் விதிப்பு: களையிழந்த முயல் விடும் விழா | தர்மபுரி செய்திகள் | Dinamalar
வனத்துறை அபராதம் விதிப்பு: களையிழந்த முயல் விடும் விழா
Added : ஜன 18, 2022 | |
Advertisement
 

அரூர்: அரூர் அருகே, வனத்துறை அபராதம் விதித்ததால், நடப்பாண்டு முயல் விடும் விழா களையிழந்தது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குடுமியாம்பட்டியில், ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்த மூன்றாவது நாள், முயல் விடும் நிகழ்ச்சி நடக்கும். இதற்காக, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமியை வழிபட்ட பின், வலைகளை எடுத்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்று முயலை பிடித்து வருவர். தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு, கோவில் அருகில் பெண்கள் பொங்கல் வைத்த பின், பெரிய மாரியம்மன், வேடியப்பன் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய, மூன்று சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து, பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வருவர். இதையடுத்து, வனத்தில் பிடித்து வந்த முயலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்து சுவாமியை சுற்றி மூன்று முறை வலம் வந்த பின், முயல் காட்டில் விடப்படு வது வழக்கம். இந்நிலையில், நேற்று முயல் விடும் விழாவிற்கு சென்ற நிருபர்களை தடுத்த உள்ளூர் இளைஞர்கள், கடந்தாண்டு நடந்த முயல் விடும் விழாவிற்கு வனத்துறையினர், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும், அதனால், நடப்பாண்டு முயல் எதுவும் பிடித்து வரவில்லை எனக்கூறி, திருப்பி அனுப்பினர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X