தர்மபுரி: தர்மபுரி, அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல், நகர செயலாளர் ரவி உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
* அரூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அரூர், அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான சம்பத்குமார் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* ஓசூர் ராயக்கோட்டை சாலை சந்திப்பிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, மாநகர செயலாளர் நாராயணன் ஆகியோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், ஓசூர் அண்ணா நகர், ராம் நகர், மூக்கண்டப்பள்ளி கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட், தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட், சூளகிரியிலும் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
* ஊத்தங்கரை ரவுண்டானாவில், எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், வேடி, நகர செயலாளர் சிவானந்தம் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
* ஊத்தங்கரை எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில், அதன் தலைவர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஏழை எளிய மக்கள், 105 பேருக்கு, இனிப்பு, புத்தாடை வழங்கினர்.
* காவேரிப்பட்டணம் ஒன்றிய, தே.மு.தி.க., சார்பில், காவேரிப்பட்டணத்தின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்ற அக்கட்சியினர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.
* மத்தூர், அ.தி.மு.க.,வினர் பஸ் ஸ்டாண்டிலுள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர். அதேபோல் போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.