அரூர்: அரூர் கடைவீதி சாலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில், சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், தனியார் பள்ளி வாகனங்கள் செல்வதால் தினமும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல், அரூர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி சாலை, மஜீத்தெரு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் சாலையை ஆக்கிரமித்து, கடைகள் வைக்கப்பட்டு உள்ளதுடன், அவற்றின் முன், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், விபத்து ஏற்படுகின்றன. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அரூர் கடைவீதி சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.