கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த டிச.,8ல் மயிலாடுதுறை மாவட்டம் வேலன்திடலை சேர்ந்த விஜயன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மூன்று விவசாயிகளின், 4.50 ஏக்கர் நிலங்களை கிரயம் செய்துள்ளார். இதுகுறித்து சம்பந்தபட்ட விவசாயிகள் போச்சம்பள்ளி பத்திரப்பதிவு அலுவலகம், கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர். அதன்படி விசாரணை மேற்கொண்டதில் வி.ஏ.ஓ.,வுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் தயார் செய்ததும், இறந்து, 20 ஆண்டுகள் ஆன ஒருவர் பெயரில் போலியான நபரை அழைத்து வந்து பத்திரப்பதிவு செய்ததும் உறுதி படுத்தப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின், 4.50 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த மயிலாடுதுறை விஜயன், 41, என்பவரை, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் போலீசார் கைது செய்தனர்.