கிருஷ்ணகிரி: மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின், 105வது பிறந்த நாள் விழா நேற்று மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல் உள்பட பலர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் நகர, அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் தூவி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியிலுள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடம், பெத்ததாளாப்பள்ளியிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.