பொங்கல் தொகுப்பு ஊழல் விரைவில் வெளிவரும்: அண்ணாமலை எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
14:54

கரூர்: ''பொங்கல் பரிசு பொருட்கள் வாங்கியதில் நடந்த ஊழல் விரைவில் வெளி வரும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கரூரில் மாவட்ட பா.ஜ., புதிய அலுவலகத்தை திறந்து வைத்த, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் கடந்த, மூன்று ஆண்டுகளாக குடியரசு தின விழா, அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது. ஆனால், நடப்பாண்டு மத்திய அரசு, தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை அனுமதிக்கவில்லை என, எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் செய்திகளை பரப்பி வருகின்றன. குடியரசு தின விழா அணி வகுப்பில், அலங்கார ஊர்திகள் பங்கேற்பது, பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்டது. குறிப்பிட்ட, காரணத்துக்காக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது என பாதுகாப்பு துறை கூறவில்லை. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில், தி.மு.க., அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர் நலன் என கூறிக் கொண்டு வெளி மாநிலங்களில் பொருட்களை கமிஷனுக்காக வாங்கியுள்ளனர். தரம் இல்லாத பொருட்களை கொடுத்து விட்டு, மக்களை அவமானப்படுத்தி விட்டனர். பொங்கல் பரிசு பொருட்களில் வழங்கிய புளியில், பல்லி இருந்ததாக கூறியவர் மீது வழக்கு போட்டுள்ளனர். அவரது மகன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். பொங்கல் பரிசு பொருட்கள் ஊழல் விரைவில் வெளிவரும். பொங்கல் திருவிழாவின் போது, திட்டமிட்டு கோவில்களை மூடி விட்டனர். அனைத்து மதத்தையும், தி.மு.க., அரசு சமமாக நடத்த வேண்டும். கேரளா அரசு கோவில்களை நிர்வாகம் செய்வதை பார்த்து, தி.மு.க., அரசு பாடம் கற்க வேண்டும்.

தமிழகத்தில், 72 சதவீதம் மக்கள் வாங்கிய கடன் செல்லாது என, தி.மு.க., அரசு கூறி விட்டது. தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, தேர்தல் நேரத்தில் நகையை அடகு வையுங்கள் என கூறி விட்டு, தற்போது காணாமல் போய் விட்டார். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது, நள்ளிரவில் சாலை பணியை ஆய்வு செய்வதால், எந்த பயனும் இல்லை. ஓட்டு போட்ட பாவத்துக்கு, நான்கு ஆண்டுகள் நாம் அனுபவிக்க வேண்டும். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க.,வினர் தொழில் ரீதியாக மிரட்டுவதால்தான், அ.தி.மு.க.,வினர், பா.ஜ.,வினர் இணைந்து வருகின்றனர். அ.தி.மு.க., மிகப்பெரிய இயக்கம். அ.தி.மு.க.,வை எதிர்த்து விட்டு, யாரும் பா.ஜ.,வில் இணையவில்லை. இதனால், கூட்டணியில் பிரச்னை எழ வாய்ப்பு இல்லை. கொரோனா காலக்கட்டத்தில், ஆன்லைன் பிரசாரத்தை, பா.ஜ., தான் முதலில் ஆதரித்து, தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X