டாக்டர்கள் போராட்டத்தை கையில் எடுக்க அரசே காரணம்: சட்டபோராட்டக்குழு தலைவர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
15:01

சேலம்: ''தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு டாக்டர்கள் நாளை தர்ணா போராட்டத்தை, கையில் எடுப்பதற்கு அரசே காரணம்,'' என, தமிழக அரசு டாக்டர்கள் சங்க சட்ட போராட்டக்குழுத் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.

இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போர்க்களத்தில், தமிழக மக்களுக்கு பலமாக இருப்பது, 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுகாதாரத்துறையில், தமிழகம் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வதற்கும் அரசு டாக்டர்களின் பங்களிப்பே காரணம். கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா முதல் அலையின் போது டாக்டர்கள் போராட்டத்தில் இறங்குவதற்கு முன்னரே, டாக்டர்களின் சேவையை அங்கீகரித்து சம்பளத்தை உயர்த்தினர். தமிழகத்தில் போராட்டத்தில் குதித்த நிலையில், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், எங்களின் கோரிக்கை நியாயமானது, தி.மு.க., ஆட்சி அமைந்த, 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என, தெரிவித்தார். ஆனால், ஆட்சி அமைத்த பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கொரோனா அதிகரித்துள்ள நிலையில், அதற்கு எதிராக போராடி மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை அரசு கண்டு கொள்ளாததால், நாளை சென்னையில் தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, பிப்.,10ல் உண்ணாவிரத போராட்டம் அனைத்து மாவட்ட தலைமை இடங்களிலும் நடத்தப்படும். கொரோனாவுடன் போராடும் டாக்டர்கள், 2009 தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட அரசாணை, 354ன்படி சம்பள உயர்வு வழங்க அரசிடம் போராட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளோம். இந்த போராட்டத்தை நாங்கள் கையில் எடுக்கவில்லை. சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து, 12 முறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான், கடைசியாக போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். போராட வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு அரசே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X