அன்னூர்:அன்னூர் நகரில், ஆறு இடங்களில், குழாய் உடைப்பால், பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகையிலிருந்து, அன்னுார், அவிநாசி மற்றும் திருப்பூருக்கு, மூன்று குடிநீர் திட்டங்களின் பிரதான மற்றும் கிளை குழாய்கள் செல்கின்றன. அத்திக்கடவு திட்ட குழாய் பதிப்பு மற்றும் கனரக லாரிகள், கன்டெய்னர் லாரிகள் செல்வதால், நகரில் பல இடங்களில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.உடைப்பு ஏற்பட்டு, பல வாரங்கள் ஆகியும் சரி செய்யாததால், தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.பழைய பேரூராட்சி அலுவலகம் முன், அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என ஆறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.'குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.