முதுகுளத்துார் பகுதியில் முகமூடி திருடர்கள் அட்டூழியம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
முதுகுளத்துார் பகுதியில் முகமூடி திருடர்கள் அட்டூழியம்
Added : ஜன 18, 2022 | |
Advertisement
 
Latest district News

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில்நள்ளிரவு நேரங்களில் முகமூடி அணிந்த நபர்கள்வீடுகள், கோயில்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துஉள்ளனர்.

முதுகுளத்துார் அருகே ஏனாதி பூங்குளம் நிறைகுளத்து அய்யனார், சுடலை மாடசாமி கோயில் வெளிமாவட்டத்தில் உள்ள ஏராளமானோர்​ குலதெய்வமாக உள்ளது. இக்கோயிலில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. சிலநாட்களுக்கு முன்பு கைலியால் முகத்தை மூடிக்கொண்டு சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நகை, பணம் ஏதும் இல்லாததால் பொருட்களை சிதறி விட்டு சென்றுள்ளனர்.

மேலும் முதுகுளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கண்மாய்க்கரைஅருகே வீடு,கடலாடி சாலையில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடு, கமுதி சாலையில் உள்ள வீடு உட்பட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் முகமூடி அணிந்து சிலர் வீடுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர். இதனால் முதுகுளத்தூர்பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X