மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைப்பாதையில் வளைவுகளில், வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால் கல்லாறு அருகே ஊட்டி மலைப்பாதையில், முதல் மற்றும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவுகளில், ஒலி, ஒளி எலக்ட்ரானிக் சாதனங்கள் பொறுத்தப்பட்டன.தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு இந்த கருவிகளை திறந்து வைத்தார். இந்நிலையில், அமைச்சர் துவக்கி வைத்த எலக்ட்ரானிக் சாதனம் செயல்படுவதில்லை.அமைச்சர் துவக்கி வைத்த திட்டம், ஒரு மாதத்தில் செயலிழந்து போனதால் வாகன ஓட்டுனர்கள் கவலை அடைந்துள்ளனர்.