மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் கார்களும், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருபவர்களின் கார்களும், காரமடை சாலையின் இரு பக்கம், வரிசையாக நிறுத்தி செல்கின்றனர்.பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள், திருப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து, 50 அடியில், போக்குவரத்து போலீசார் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, சாலையின் இருபக்கமும் நிறுத்தியுள்ள கார்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.