சிவகங்கை : எட்டு ஆண்டாக கிடப்பில் இருந்த சிவகங்கை ஸ்பைசஸ் பூங்காவிற்கு' விமோசனம் பிறக்க போகிறது. பிப்.,யில் உற்பத்தி துவங்கியதும் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் விளையும் ஏலக்காய், மிளகு, மஞ்சள், கிராம்பு போன்ற நறுமண பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பணிக்கான தனி அமைப்பு இந்திய நறுமண பொருள் வாரியம் (ஸ்பைசஸ்போர்டு) மத்திய அரசின் வணிக, தொழிற்சாலை அமைச்சரவையால் செயல்படுகிறது. இந்த வாரியம் மூலம் நாடு முழுவதும் 6 ஸ்பைசஸ் பூங்கா நிறுவியுள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ரேபரேலியில் 2 பூங்கா நிறுவும் பணி நடக்கிறது.
தமிழகத்தில் நிறுவப்படும் ஒரே 'ஸ்பைசஸ் பூங்கா' சிவகங்கையில் மட்டுமே. கடந்த 2013 ல் திறந்தனர். ஆனால் நகர திட்டமிடல் அனுமதி கிடைக்க எட்டு ஆண்டுகள் ஆனதால் திறக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வாரியம் ரூ.13 லட்சம் தமிழக அரசிடம் செலுத்தி அனுமதியை பெற்றது. இதன் காரணமாக இங்கு நிறுவப்பட்ட பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பழுதடைந்து கிடக்கின்றன.
தற்போது அனுமதி கிடைத்துள்ளதால் நறுமண பொருட்கள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.1 மணி நேரத்திற்கு 500 கிலோ தயாரிப்புஇப்பூங்கா 73.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தமிழகத்தில் விளையும் மஞ்சள், மிளகாய் போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வந்து அதை மதிப்புகூட்டிய பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே இப்பூங்காவின் பணி.
இதற்காக தனியார் தொழில் முனைவோருக்கு ஒரு ஏக்கர் வீதம் 31 ஏக்கர் 30 ஆண்டு ஒப்பந்தபடி பகிர்ந்து அளிக்கப்பட உள்ளன. தற்சமயம் 18 பேர் தொழில் துவங்க முன்வந்துள்ளனர். உள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் கவனம் பெறும் என்பதால் அந்நிய செலாவணி அதிகரிக்கும். தொழில் முனைவோர் அதிகம் உருவாவதால் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இங்குள்ள இரண்டு அரவை இயந்திரங்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 500 கிலோ மஞ்சள், மிளகாயை பொடியாக்கும் திறன் கொண்டவை. இங்கு தொழில் துவங்குவோர் இயந்திரங்கள் வாங்க ரூ.1 கோடி வரை வாரியம் மூலம் நேரடி மானியம் பெற்றுத்தரப்படும். இந்த நறுமண பூங்கா மூலம் விரைவில் பன்னாடுகளையும் வரவேற்கும் சிவகங்கை தொழில் நகராகும்.
'சிவகங்கை தொழில் நகராகும்'
இது குறித்து 'ஸ்பைசஸ் பூங்கா' வளாக மேலாளர் போஸ் கூறியதாவது, ஏற்கனவே 18 தொழில் முனைவோர் இடங்களை பெற்று தொழில் துவங்க உள்ளனர். இது தவிர மிளகு ஆயில் தயாரிக்கும் ரூ.1 கோடி திட்டம், மும்பையில் இருந்து கார்ப்பரேட் கம்பெனிகள் தொழில்துவங்க விண்ணப்பித்துள்ளன. விரைவில் சிவகங்கை நறுமண பூங்கா பெரிய தொழில் நகராகும், என்றார்.