தூய்மை பணியாளருக்கு 'பளார்' : ஒப்பந்த பணியாளர் மீது புகார் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தூய்மை பணியாளருக்கு 'பளார்' : ஒப்பந்த பணியாளர் மீது புகார்
Added : ஜன 18, 2022 | |
Advertisement
 

கோவை:கோவை மாநகராட்சியில் பணியாற்றும், நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் தாக்குதல் நடத்தியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர் சிவக்குமார், 42. இவரை அவருடன் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர் செல்வம் என்பவர், கன்னத்தில் அறைந்ததாக பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரில், 'எனக்கு இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சூப்பர்வைசரிடம் முன்னதாகவே சொல்லி விடுப்பு எடுத்தேன். ஆனால் செல்வம் என்ற ஒப்பந்த துாய்மை பணியாளர் என்னை வேண்டுமென்றே கன்னத்தில் அறைந்து, தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுகுறித்து சக பணியாளர்களிடம் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்புகார் குறித்து, பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X