திண்டுக்கல் : தனியார் அலைபேசி நிறுவனங்களின் கட்டண உயர்வை கண்டித்து, திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 'செல்பி' எடுத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் நகர செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெகன், மாவட்ட செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். 'தனியார் அலைபேசி நிறுவனங்களின் கட்டண உயர்வை தடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., இணைப்புகளுக்கு 4ஜி, 5ஜி சேவையை வழங்கி பாதுகாக்க வேண்டும்'உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர்.