கோவை:கோவையில், சாலை ஓரத்தில் படுத்து உறங்கிய தொழிலாளி, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே, பிளாட்பாரத்தில் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. அவ்வழியே சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தது, மேட்டுப்பாளையம் ரோடு,எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்த சண்முகம், 45 என்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு பிளாட்பாரத்தில் ஒரு கடையின் முன் படுத்து துாங்கியுள்ளார். அப்போது, இவரது தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். பணம் பறிக்கும் நோக்கில் கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர்.