நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார். கடலுார் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 55; விவசாயி. இவருக்கும் சிலம்பி நாதன்பேட்டையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இதனால், பன்னீர்செல்வத்தின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை ஜெயபிரகாஷ் அடிக்கடி மிரட்டினார். இதுகுறித்து பன்னீர்செல்வம் குடும்பத்தினர் ஜெயபிரகாஷிடம் தட்டிக்கேட்டனர். அப்போது, பன்னீர்செல்வத்தின் மகன் ரமேஷ் மற்றும் ஜெயபிரகாஷ் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷும், அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் சேர்ந்து பன்னீர்செல்வம், அவரது மனைவி தங்கலட்சுமி, ௫௦; மகன் ரமேஷ், 32; ரமேஷின் மைத்துனர் விஜய், 21, ஆகியோரை தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த நால்வரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பன்னீர்செல்வம் இறந்தார். ரமேஷ் அளித்த புகாரில், ஜெயபிரகாஷ் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிந்து, தமிழரசன், 21; தட்சணாமூர்த்தி, 35 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.