தேனி : தேனியில் நாளை (ஜன.20), நாளை மறுநாள் (ஜன.,21) என 2 நாள் கறவை மாடு இலவச வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. தேனி- மதுரை ரோடு சார் நிலை கருவூலம் எதிரே உழவர் பயிற்சி மையத்தில் காலை 10:15 மணிக்கு பயிற்சி துவங்கும். 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். கலந்து கொள்ள விரும்புவோர் 04546-260047 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என உழவர் பயிற்சி மைய தலைவர் செந்தில்குமார் கூறியுள்ளார்.