வேடசந்துார் : வேடசந்துார் அமைதி அறக்கட்டளை, பேட் தொண்டு நிறுவனம் சார்பில் அம்மாபட்டி, சொக்கலிங்கபுரத்தில் குழந்தை பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரூபபாலன் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் ரேணுகா தேவி வரவேற்றார். 'அங்கன்வாடி, பள்ளி குழந்தைகளை கண்காணிப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது, இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது, குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்'குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஊராட்சி தலைவர்கள் ரங்கராஜ், சந்தியா, செயலாளர்கள் சத்தியமூர்த்தி, முருகேசன், அங்கன்வாடி பணியாளர்கள் செல்வி, வள்ளி நாயகி பங்கேற்றனர். தன்னார்வலர் ஜெயப்பிரியா நன்றி கூறினார்.