பள்ளத்தை மூடிய நெடுஞ்சாலைத்துறை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பள்ளத்தை மூடிய நெடுஞ்சாலைத்துறை
Added : ஜன 19, 2022 | |
Advertisement
 

வடமதுரை : வடமதுரையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் தோண்டிய பள்ளம் மூடப்பட்டது.

வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. தாராபுரம், வேடசந்தூர், பழநி, குஜிலியம்பாறை, கோயம்புத்தூர் செல்லும் பஸ்கள் இங்குள்ள காந்திசிலை முன்பாக மண் தரையில் சில நிமிடங்கள் நிற்கும். இவ்விடத்தில் போஜனம்பட்டி ரோடு, கார், ஆட்டோ நிறுத்தங்களுக்கான ரோடும் பிரிவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சிக்கலான இடம்.சமீபத்தில் வடமதுரையில் ரோடு புதுப்பித்தல் பணி நடந்தது. இதற்காக வெளியில் இருந்து மணல் கொண்டு வராமல் காந்தி சிலை முன்பாக பஸ்கள் நின்று செல்லும் இடத்தை வெட்டி பள்ளமாக்கினர். இதனால் பஸ்கள் தார் ரோட்டில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் நேற்று மண் நிரப்பினர். போக்குவரத்து நெரிசல் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X