தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழா நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், பண்ணைக்காடு பாலசுப்பிரமணி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கீழக்கோட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் நடந்த வள்ளலார் வழிபாட்டில் அருள் விளக்கு ஏற்றி அகவல் பாராயணம், மகாதீபாராதனை நடந்தது.இதே போல், கன்னிவாடி சோமலிங்க சுவாமி, கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* கோபால்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் கோயில் நுழைவு வாயிலில் நின்றபடியும், கொடிக்கம்பம் அருகே விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதே போல், சிவதாண்டவபாறை பால தண்டாயுதபாணி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.