தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட விஜயராகவா சாலையில், மூன்று நாட்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.இது, தேனாம்பேட்டை மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.