தேனாம்பேட்டை, : mமாநகராட்சி இலவச கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால், நடைபாதை அசுத்தம் அதிகரித்து, துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், நடைபாதை அசுத்தத்தை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட இலவச கழிப்பறைகள் சில, உரிய பராமரிப்பு இன்றி மூடப்பட்டுள்ளன.அந்தவகையில், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கே.பி., தாசன் சாலையில் உள்ள மாநகராட்சி இலவச கழிப்பறை மூடப்பட்டுள்ளது. ஒயிட்ஸ் சாலையில் உள்ள கழிப்பறை அகற்றப்பட்டது.
இதனால், நடைபாதையை சிலர் சிறுநீர் கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடைபாதை அசுத்தத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.